புது குற்றவியல் நடைமுறைச்சட்டங்கள்; இது அப்பட்டமான இந்தி திணிப்பு...கொந்தளித்த எடப்பாடி!

Tamil nadu Edappadi K. Palaniswami
By Swetha Jul 01, 2024 01:09 PM GMT
Report

புதிய குற்றவியல் நடைமுறைச்சட்டங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி பேசியுள்ளார்.

குற்றவியல் சட்டம்

ஒன்றிய அரசு குற்றவியில் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களை மாற்றுவதுடன் அதில் உள்ள சட்டப்பிரிவுகளையும் மாற்றுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

புது குற்றவியல் நடைமுறைச்சட்டங்கள்; இது அப்பட்டமான இந்தி திணிப்பு...கொந்தளித்த எடப்பாடி! | Eps Slams New Criminal Laws

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

வீராதி வீரர்தான் எடப்பாடி..40-க்கு 40 அதிமுக கண்ணை உறுத்துகிறது - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

வீராதி வீரர்தான் எடப்பாடி..40-க்கு 40 அதிமுக கண்ணை உறுத்துகிறது - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கொந்தளித்த எடப்பாடி

மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது , முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியதும் கூட, அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை

புது குற்றவியல் நடைமுறைச்சட்டங்கள்; இது அப்பட்டமான இந்தி திணிப்பு...கொந்தளித்த எடப்பாடி! | Eps Slams New Criminal Laws

இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு.இந்தி திணிப்பாணது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது,

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.