முதல்வரே விழித்தெழுங்கள் - இது என்ன போதை பொருள் குடோனா.. இபிஎஸ்

M K Stalin Tamil nadu ADMK DMK Edappadi K. Palaniswami
By Karthick Mar 02, 2024 04:38 AM GMT
Report

தமிழ்நாட்டில் நேற்று( மார்ச் 1) இரு இடங்களில் ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை குறித்து இபிஎஸ்  கண்டனம் தெரிவித்துள்ளார். 

இபிஎஸ் கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க போதை பொருட்கள் கண்டெடுக்க பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது.

eps-slams-mk-stalin-drug-case-in-tamil-nadu

ரயில் கூப்பைகள் முதல் கார்ப்பரேஷன் குப்பைகள் வரை எங்கு காணினும் போதைப்பொருட்களே நீக்கமற நிறைந்துள்ளன. நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் மொத்தவிற்பனைக் கிடங்கா?

அறவே...

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே- விழிதெழுந்து , தொடர் நடவடிக்கைகள் எடுத்து போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க முன்னெடுப்புகளை எடுங்கள். இனி தமிழ்நாட்டில் போதை பொருள் அறவே ஒழிக்கும் வரை நாங்கள் விடுவதாக இல்லை.

eps-slams-mk-stalin-drug-case-in-tamil-nadu

காவல்துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, மாவட்டந்தோறும் சோதனைகள் நடத்தி, தமிழ்நாட்டில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்து,

eps-slams-mk-stalin-drug-case-in-tamil-nadu

இந்த போதைப் பொருட்களை புழக்குவோர் யாராக இருப்பினும், எவ்வித பாகுபாடும் இன்றி கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டை போதைப் பொருள் அறவும் அற்ற மாநிலமாக மாற்றவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.