அரசின் அராஜகப் போக்கு - ஊடகத்தை முடக்கும் முனைப்பு - இபிஎஸ் கடும் கண்டனம்

Tamil nadu ADMK DMK Edappadi K. Palaniswami
By Karthick May 03, 2024 09:15 AM GMT
Report

இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பக்க பதிவு வருமாறு,

விடியா திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்.

edappadi palaniswami press meet

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

காலம் வந்திருச்சு - நிர்வாகிகளே பணியை துவங்குங்கள் - உத்தரவிட்ட இபிஎஸ் - அதிமுகவில் பரபரப்பு

காலம் வந்திருச்சு - நிர்வாகிகளே பணியை துவங்குங்கள் - உத்தரவிட்ட இபிஎஸ் - அதிமுகவில் பரபரப்பு

அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.

edappadi palaniswami slams dmk

சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து சவுக்கு சங்கர் திமுக அரசு மீது பெரும் குற்றசாட்டுக்களை வைத்து வருகின்றார் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.