Thursday, Jul 17, 2025

சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமையை பறிப்பதா? எடப்பாடி கண்டனம்

ADMK Edappadi K. Palaniswami
By Karthick 2 years ago
Report

இஸ்லாமிய கைதிகள் வழிபாடு செய்ய அரசு வழிவகை செய்துகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அறிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிறைச்சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல, வர்களை நல்வழிப்படும் இடங்களுமாகும், கடந்த 29 மாத திமுக ஆட்சியில், சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக செய்திகள் வருகின்றன.

eps-slams-dmk-in-muslim-praying-in-jail

எல்லாவற்றிற்கும் மேலாக, சிறை கைதிகளின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதாக நாளிதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. எந்த மதத்தை சார்ந்த சிறை கைதியாக இருந்தாலு, ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு வழிபாட்டு உரிமைகள் வழங்கப்பட்டு வந்தன. குறிப்பாக, வேலூர் மத்திய சிறை சாலையில் காலம் காலமாக இந்து, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிறைவாசிகள் அவர்களுடைய மத நம்பிக்கையின்படி வழிபடுவதற்கு பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அதிமுக ஆட்சியிலும் இந்த நடைமுறை தொடர்ந்தது. அந்தந்த குருமார்கள், பண்டிகை களங்களில் சிறைக்கு அனுமதிக்கப்பட்டு சிறப்பு பிராத்தனை செய்து நல் எண்ணங்களை வளர்க்கவும், கைதிகளின் நலனுக்காக பிராத்தனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், சிறைவாசிகளிடையே இந்த வைரஸ் ஹொற்று பரவக்கூடாது என்பதால். சிறை சாலைகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இந்த திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, பிறகும் ஏதோ ஒரு காரணத்தால் சிறைகளில் மத வழிபாடுகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகின்றன. குறிப்பாக வேலூர் சிறை சாலைக்குள் மூன்று வழிபாட்டு தலங்கள் உள்ளன.

அதில் இரண்டு மத வழிபாட்டு தலங்களை தற்போது வழிபாட்டிற்கு அனுமதித்து விட்ட சிறை நிர்வாகம், இஸ்லாமிய சிறைவாசிகள் தொழுகை நடத்தும் மசூதியை மட்டும் திறக்கலாம் முடி வைத்துள்ளது. இதனால் வேலூர் சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. தமிழக சிறை சாலைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களது மத கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துவதாக பதிவிட்டுள்ளார்.