இடைத்தேர்தல் வரும் தொகுதிகளுக்கு மட்டும் நலத்திட்டம் - எடப்பாடி பழனிசாமி
eps slams cm vijay welfare schemes only to byelection constituencies: இடைத்தேர்தல் வரும் தொகுதிகளுக்கு மட்டும் முதல்வர் விஜய் நலத்திட்டம் உதவிகளை வழங்கி வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இடைத்தேர்தல் வரும் தொகுதிகளுக்கு நலத்திட்டம்
சென்னை விமான நிலையத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
இதில் பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் விஜய்தான் முதல்வர், அவர் எல்லா தொகுதிகளுக்கும் சென்று மக்களை பார்க்க வேண்டும். அங்கு இருக்கிற பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், எந்த தொகுதிகளுக்கெல்லாம் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறோமோ அந்த இடங்களுக்கு மட்டும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமாகவே இதனை அவர் மேற்கொள்கிறார்.
ஜிஎஸ்டி வரி வருவாய் பல மாநிலங்களில் அதிகரித்த நிலையில் நமது மாநிலத்தில் 3% மட்டுமே பதிவாகி உள்ளது.
நிர்வாகத் திறனற்ற அரசாக இந்த அரசு உள்ளதால் நமக்கு ஜிஎஸ்டி வருவாய் வசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசின் நலத்திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
தவெக ஆட்சிக்கு வந்தபின்னர் இந்த 6 மாத காலத்தில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அதை கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
போதைப்பொருள் கடத்தல்கார பெண்களுடன் தொடர்பு : அக்குரஸ்ஸ குற்றப்பிரிவு OIC அதிரடியாக பணிநீக்கம் IBC Tamil