"தனக்கு தானே கண்டனம் சொல்லிக்கும் பொம்மை முதலமைச்சர்"..! இபிஎஸ் விமர்சனம்

M K Stalin ADMK DMK Edappadi K. Palaniswami
By Karthick Jan 27, 2024 11:01 AM GMT
Report

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்கதையாகி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி முதலமைச்சரை விமர்சனம் செய்துள்ளார்.

எடப்பாடி கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், "சட்டம்-ஒழுங்கு என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்... மறுபடியும் சொல்கிறேன்... யாராக இருந்தாலும்" என்று கேமராவுக்கு முன் சினிமா வசனம் பேசிய திரு. ஸ்டாலின் அவர்கள், ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் வேலை சட்டம்-ஒழுங்கை Mortuary-க்கு அனுப்பியதுதான்.

eps-slams-cm-mk-stalin-as-doll-chief-minister

முக ஸ்டாலின் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையின் அலட்சியப் போக்கையும், தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையையும் ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தப்பித்துக்கொள்ள தனக்குத்தானே கண்டனம் வேறு தெரிவித்துக்கொள்கிறார்.

பொம்மை முதலமைச்சர்  

அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, "திரு. ஸ்டாலின் அவர்களே, அது கண்ணாடி!”

eps-slams-cm-mk-stalin-as-doll-chief-minister

தமிழகத்தில் தொடர்கதையாகி வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; தனக்குத் தானே கண்டனம் தெரிவித்து தப்பிக்க நினைக்கும் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.