மாற்றுத் திறனாளிகளை வஞ்சிக்கும் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

M K Stalin Edappadi K. Palaniswami
By Karthikraja Feb 07, 2025 08:30 PM GMT
Report

 கருணாநிதி பெயரில் அரங்கம் கட்டுவதற்கு இருக்கும் நிதி, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு இல்லையா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை தவறாமல் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை கடந்த 3 மாதங்களாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழங்கப்படவில்லை என வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மாற்றுத் திறனாளிகளை வஞ்சிக்கும் அரசு

திரு. கருணாநிதி பெயரில் இசிஆர் சாலையில் அரங்கம் கட்டுவதற்கு இருக்கும் நிதி, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு இல்லையா? தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, நிதி நிலையை காரணம் காட்டி, மாற்றுத் திறனாளிகளை வஞ்சிக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். 

உதவித்தொகை இன்றி தவிக்கும் மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, உடனடியாக உதவித்தொகை நிலுவைகளை வழங்கி, மாதாந்திர உதவித்தொகை தவறாமல் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.