ஆட்சியில் பங்கு தர நாங்கள் ஏமாளிகள் இல்லை - எடப்பாடி பழனிசாமி அதிரடி
ஆட்சியில் பங்கு தர நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!" என்ற பெயரில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
திருத்துறைப்பூண்டியில் பேசிய அவர், "எடப்பாடி கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொண்டு விட்டார் என எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள்.
ஸ்டாலின் அவர்களே நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும்.
பாஜக கூட்டணி
எங்களுக்கு கூட்டணி உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை. நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படமாட்டோம். நீங்கள்தான் உங்கள் வாரிசுக்காக ஆட்சியைப் பிடிக்க துடிக்கிறீர்கள்.
திமுக ஒரு ஊழல் கட்சி என்பது பாஜகவின் நிலைப்பாடு. அந்த அடிப்படையில்தான் பாஜக எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைக்கும் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.
இன்னும் சில கட்சிகள் சரியான நேரத்தில் வரும், மரண அடி குடுப்போம். 200 தொகுதிகள் வெற்றி பெறுவது கனவு. ஆனால் நிஜத்தில் 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெரும்" என பேசினார்.