இந்தியாவிலே மோசமான ஆட்சி தமிழ்நாட்டில்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Vijay Edappadi K. Palaniswami Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Nov 12, 2026 01:33 PM GMT
Report

edappadi palanisamy  says tamilnadu governance is worst in india: இந்தியாவிலே மோசமான ஆட்சி நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இந்தியாவிலே மோசமான ஆட்சி தமிழ்நாட்டில்

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

இந்தியாவிலே மோசமான ஆட்சி தமிழ்நாட்டில்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம் | Eps Says Tamil Nadu Governance Is Worst In India

தவெக ஆட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மோசமான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சி மிக மிக மோசமான ஆட்சி. கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

போதைப் பொருள் விற்பனை அதிகளவில் நடைபெறுகின்ற காரணத்தால் தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அனைத்து கட்சித் தலைவர்களும் கண்டித்தும், அறிக்கையும் விடுகிறார்கள். ஆனால் இந்த அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கையை எடுப்பதில்லை. ஏனென்றால் திறமையில்லாத அரசாங்கமாக இந்த அரசாங்கம் நடக்கிறது.

இந்த 6 மாத ஆட்சியில் மக்கள் பட்ட துன்பம்தான் ஏராளம். விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்குலைவு இதையெல்லாம் சந்திக்கக்கூடிய ஆட்சி தான் இந்த 6 மாத கால ஆட்சி" என தெரிவித்துள்ளார்.