தமிழகத்தை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல்.. முழு நிவாரணம் தேவை - இபிஎஸ்!
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என இபிஎஸ் வலியறுத்தி உள்ளார் .
ஃபெஞ்சல் புயல்
ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பயிர்கள் சுமார் 12 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், கனமழை காரணமாக சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீர் மற்றும் வெள்ளத்தில் மூழ்கி முழுமையாக சேதமடைந்துள்ளன. ஏற்கெனவே, கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு ஸ்டாலினின் திமுக அரசு பயிர் காப்பீடு செய்யாததால்,
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு ஹெக்டேருக்கு பயிர் காப்பீட்டுத் தொகையாக வழங்கும் ரூ.84 ஆயிரம் கிடைக்கவில்லை. மேலும், கடந்த 3 ஆண்டுகளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.34 ஆயிரம் நிவாரணமாக வழங்க நான் வலியுறுத்தினேன்.
முழு நிவாரணம்
ஆனால், அந்த தொகையை திமுக அரசு வழங்கவில்லை. . இந்நிலையில், தற்போது புயல் மழையில் மீண்டும் விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டிருந்த பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எனவே, இந்த அரசு கண்துடைப்பு கணக்கெடுப்பு நாடகம் நடத்தாமல், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களிலும் பிற
மாவட்டங்கலிலும் மழை மற்றும் வெள்ளநீரால் மூழ்கியுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களை வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் முழுமையாகக் கணக்கெடுப்பு நடத்தி முழு நிவாரணத்தை முதல்வர் நேரடியாகச் சென்று வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.