மோடி நல்லவர் என சொன்ன கருணாநிதி - எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்
திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
மோடி மிகவும் நல்லவர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதில் பேசிய அவர், "உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார், எடப்பாடி பழனிசாமி, மோடிக்கு முரட்டு அடிமை என்கிறார். உங்கள் தாத்தா சொல்லி இருக்கிறார் பாருங்க.

குஜராத்தை சிறப்பாக மேம்படுத்தி வருகிறார். நரேந்திர மோடி மிகவும் நல்லவர். என கருணாநிதி சொல்லி இருக்கிறார். அவங்க தாத்தாவே சொல்லிவிட்டார். இது தெரியாமல் உளறிக்கிட்டு இருக்கார்.
அதிமுக பாஜக அடிமையாம். எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சொல்வதை தான் கேட்பாரம். உங்களுக்கு தான் அந்த புத்தி. எங்களுக்கு சுய புத்தி உள்ளது. வாயடக்கம் தேவை.
2001 சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் திமுக கூட்டணி வைத்தது. திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி. அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சி. எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என பாருங்கள்.

10 நாட்களாக என்னை பற்றி மட்டுமே பேசுகிறார். மக்களுக்கு என்ன செய்வோம், என்ன செய்தோம் என ஒன்றுமே பேசவில்லை. ஸ்டாலின் தான் அப்படி என்றால் உதயநிதியும்.
தனிப்பட்ட நபருக்காக கார் பந்தயம்
தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்ன பதவி கிடைத்தால் காலில் விழுந்து ஆசி பெறுவது. அம்மாவின் காலை தொட்டு வணங்கியதில் என்ன தவறு? இந்த பண்பு தெரியாது. பண்பான குடும்பத்தில் பிறந்தால் தானே பண்பை பற்றி தெரியும்?

துணை முதலமைச்சராக தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன? மக்களின் வரிப்பணத்தில் கார் பந்தயம் தேவையா? சென்னையின் மத்திய பகுதியில், தலைமை செயலகம் உள்ளது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளது. அப்படிப்பட்ட பிரதான சாலையில் கார் பந்தயம்.
யாருக்காக? தனிப்பட்ட நபர் ஒருவர். பெயர் சொல்ல விரும்பவில்லை. அவருக்காக பல நூறு கோடி மக்களோட வரிப்பணம் ஊதாரித்தனமாக செலவழிக்கிறார். நீங்கள் எங்களை பற்றி விமர்சனம் செய்ய யோக்கியதை இருக்கிறதா? என பேசினார்.