அதெல்லாம் முடியாது இபிஎஸ் இதற்கு பதில் கூற வேண்டும் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Mar 03, 2023 07:16 AM GMT
Report

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிசாமி ஜூலை 11-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடை வழங்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ நியமித்தது உள்ளிட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி எம்எல்ஏவும், வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார், ராமமூர்த்தி அமர்வில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின்போது ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் வாதத்தை முன்வைத்தார். எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கட்சிகள் கட்சி நிறுவனர் எம்ஜிஆரின் விதிமுறைகளுக்கு எதிரானது.

நீதிமன்றம் தீர்ப்பு

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும், பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. கட்சியில் இருந்து நீக்குவத்து தொடர்பான அஜெண்டா பொதுக்குழு நிகழ்வில் இல்லை, எங்களை நீக்கியது இயற்கை நீதிக்கு எதிரானது. தீர்மானத்தின் அடிப்படையில் இபிஎஸ் தரப்பு செயல்பட தடை விதிக்க வேண்டும் என தங்களது வாதத்தை முன் வைத்தனர்.

அதெல்லாம் முடியாது இபிஎஸ் இதற்கு பதில் கூற வேண்டும் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Eps Response Order Adjournment Assembly

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் எதிர்மனுதாரக எடப்பாடி பழனிசாமி தரப்பு சேர்க்கப்பட்டது. பின்னர், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் இபிஎஸ் தரப்பு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  எடப்பாடி பழனிசாமி, அதிமுக தரப்பினர் பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு பதில் மனுக்களை மனுதாரருக்கு அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.