தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதியை அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான எஸ். வளர்மதி, நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து இபிஎஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

பதவி பறிப்பு
எஸ். வளர்மதி 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்.
இதேபோல், ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் நாளை தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமையில், அதிமுகவில் இருந்து பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan