அம்மா என்றாலே அம்மா ஜெயலலிதாவின் நினைவு தான் - நெகிழும் எதிர்க்கட்சி தலைவர்

J Jayalalithaa AIADMK Edappadi K. Palaniswami
By Karthick May 12, 2024 05:05 AM GMT
Report

அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இபிஎஸ் அறிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

eps post wishing mothers day remembaring jaya

பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு விதியாக இருக்கு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு விதியாக இருக்கு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

'அம்மா' என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது.

eps post wishing mothers day remembaring jaya

போற்றுதலுக்குரிய அன்னையர் அனைவரும் பூரண நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நிறை வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.