பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி

pongal wishes eps home minister amit shah pm modi edappadi k palaniswamy
By Swetha Subash Jan 14, 2022 04:01 AM GMT
Report

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு தைத்திருநாளை தமிழர்கள் வரவேற்றுள்ளனர்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் கோலாகலமாக பொங்கல் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்தினை தெரிவித்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

"இந்த அறுவடை திருநாளான தைப்பொங்கல் திருநாளில், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு எனது அன்பான தமிழர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல நல்ல ஆரோக்கியம் மற்றும் சிறந்த புதிய சிந்தனைகள் பிறக்க வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி | Eps Pongal Wishes To Narendra Modi And Amit Shah

இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் எடப்பாடி பழனிசாமி தனது பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.