NDA கூட்டணி: எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இல்லை... அதிர்ச்சியில் அதிமுக
திருச்சியில் இன்று நடைபெறும் NDA கூட்டணியின் பொதுக்கூட்ட நுழைவு வாயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறாததால் அதிமுகவின் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சியில் இன்று மாலை NDA கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது, பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
மாநாட்டுக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, பிரதமர் மோடி முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என கூறப்படுகிறது.

மாநாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள நுழைவு வாயிலில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறவில்லை.
கூட்டணி கட்சி தலைவர்களான அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேல் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், மத்திய அமைச்சர் எல். முருகன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் படங்கள் இடம்பெற்றுள்ளன.
மற்றொரு நுழைவு வாயிலில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் படங்கள் உள்ளன, அதிலும் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இல்லை.
இந்த விவகாரம் கூட்டத்திற்கு வந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.