இரட்டை இலை சின்னம் யாருக்கு : இபிஎஸ் மனு நாளை விசாரணை?
இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியின்மனு உச்சநீதிமன்றத்தில் நாளைவிசாரணைக்கு வருகிறது.
சின்னம் தொடர்பான விசாரணை
உட்கட்சி பூசல் காரணமாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு ஏற்கனவே பொதுக்குழுவை நாடியுள்ளன. குறிப்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து , இரு அணிகளும் தனித்தனியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.
நாளை விசாரணை
தற்போது இடைத்தேர்தல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி இடைக்கால தீர்ப்பு அளிக்க வேண்டும் என பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
இந்த இரண்டு வழக்குகளும் நாளை விசாரணைக்கு வருகிறது. அவசர மனுவாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மூன்றாவது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
அதில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது என்றும், தீர்ப்பு சாதகமாக இல்லாவிட்டால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்து வேட்பாளர்களை அறிவிக்கவும் பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.