தமிழக சட்டசபை முதல்நாள் கூட்டத்தை புறக்கணித்த ஈபிஎஸ் , காரணம் என்ன ?
எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பெரும் சர்ச்சையாகி தேர்தல் ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல்
எனவே, சட்டப்பேரவை குழுக்களை மாற்றுவது தொடர்பாக மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்கக்கூடாது என்றும் இரு கடிதங்களை ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகரிடம் கொடுத்துள்ளார்.

இதேபோல், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயக்குமாரை அங்கீகரித்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் கடிதங்கள் கொடுத்துள்ளார். இதில், சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் எம்.எல்.ஏக்களின் இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
சட்டப்பேரவை புறக்கணிப்பு
ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகள் மாற்றப்படாமல் உள்ள நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தினை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புறக்கணித்துள்ளது.
சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்களில் பட்டியலில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் பெயர் உள்ளது சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஆர்.பி. உதயகுமார் பெயர் இடம்பெறவில்லை