எனக்கு நோட்டீஸ் அனுப்ப நீங்க யார்? இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல்

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Dec 27, 2022 05:34 AM GMT
Report

அதிமுக கட்சி பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக இபிஎஸ் அனுப்பிய கடிதத்திற்கு ஓபிஎஸ் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இபிஎஸ் கடிதத்திற்கு ஓபிஎஸ் பதிலடி 

அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்குவதாகவும், பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

EPS - OPS conflict

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்க அடிப்படை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

பொதுக்குழுவால் என்னை நீக்க முடியாது. கட்சி தொடங்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக இபிஎஸ் செயல்படுகிறார் என்று பதில் அளித்துள்ளார்.