கொடநாடு விவகாரம்: ஆளுநருடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்திப்பு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்தனர்.
கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனிடம் கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கொடநாடு வழக்கு முடியவுள்ள நிலையில், தங்களது பெயர்களுக்கு களங்கள் விளைவிக்கும் வகையில் சதி நடப்பதாக நேற்று சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோர் பேசி வருகின்றனர்.
அவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உள்ளனர்.