ஈரோடு இடைத்தேர்தல் .. உச்சநீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ் : காரணம் என்ன ?

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Jan 27, 2023 06:28 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல்

திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களத்தில் உள்ளார், தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது.

நாம் தமிழர் கட்சி சார்பில்  ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 

அதிமுக வேட்பாளர் 

 இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு இடைத்தேர்தல் .. உச்சநீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ் : காரணம் என்ன ? | Eps Moves Supreme Court Erode Election

ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக2வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இடைத்தேர்தலுக்காக 111 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ் 

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தேர்தல் ஆணையம் இடைக்கால பொது செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது என்றும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார் .