எடப்பாடி பழனிசாமி,ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து அதிரடி உத்தரவிட்டது.
இந்தநிலையில் தன் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பேரறிவாளன் மற்றும் அவரது தாய் அற்புதம்மாள் நன்றி கூறினார்.
பேரறிவாளனின் சந்திப்பு குறித்து ட்வீட் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளனை சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்.
சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
இதைனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,மற்றும் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.