பொதுச் செயலாளர் ஆகும் இபிஎஸ் - தேர்தல் ஆணையத்தில் ஆதரவு கடிதம் சமர்பிப்பு
AIADMK
Edappadi K. Palaniswami
By Thahir
தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ்-க்கு ஆதரவு அளித்த பொதுக்குழு உறுப்பினர்களின் உறுதி மொழி பத்திரம் சமர்பிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. 25,00க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை ஈபிஎஸ் தரப்பிடம் வழங்கியிருந்தனர்.

டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆதரவு கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகம் வழங்கினார்.
சுய விருப்பத்துடனும், முழு மனதுடனும் இடைக்கால பொதுச்செயலாளரை செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆதரவு கடிதம் பெறப்பட்டது.