அதிமுகவில் ஓபிஎஸ் சகாப்தம் முடிவுக்கு வந்ததா? நீதிமன்றம் தீர்ப்பால் பொதுச்செயலாளர் ஆன இபிஎஸ்

ADMK AIADMK
By Thahir Mar 28, 2023 05:11 AM GMT
Report

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு 

அதிமுக பொதுகுழு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதிமுகவில் ஓபிஎஸ் சகாப்தம் முடிவுக்கு வந்ததா? நீதிமன்றம் தீர்ப்பால் பொதுச்செயலாளர் ஆன இபிஎஸ் | Eps Is Not Barred As Aiadmk General Secretary

எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக பொதுச்செயலார் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் , ஜேடிசி பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார் இரு தரப்பு வாதங்களையும் கடந்த 22 ஆம் தேதி கேட்ட அவர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தார்.

நீதிபதி அதிரடி தீர்ப்பு 

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று நீதிபதி வாசித்தார் அப்போது அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உத்தரவிட்டார்.

பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கான எதிரான ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.   

இதையடுத்து இபிஎஸ் ஆதரவாளர்கள் க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு முன் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அதிமுக தலைமை அலுவலகம் இன்று தீர்ப்பு வந்த பின்னர் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக தலைமை கழகம் வந்த அவர் பொதுச்செயலாளராக பதவியேற்க உள்ளார்.