முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து ஈபிஎஸ்க்கு பொறாமை : அமைச்சர் தங்கம் தென்னரசு
முதல்வருக்கு கிடைத்த வரவேற்பால் ஈபிஎஸ்க்கு பொறாமையினை ஏற்படுத்தி உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு:
ஒட்டுமொத்த தமிழகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே பிரதமர் மோடி, மத்திய அமச்சர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தபோதும் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்தினார்
. பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசினார். முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வரவேற்பால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த தேவையும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு .
தன்னை காப்பாற்றிக்கொள்ளத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். ஒவ்வொரு முறையும் டெல்லி சென்றபோது தமிழ்நாட்டின் நலன்களை ஈபிஎஸ் அடகுவைத்ததாக தெரிவித்தார்.
தன்னை பாதுகாத்துக்கொள்ள பிரதமரை சந்தித்த பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் பயணத்தை அவதூறாக பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.