இபிஎஸ்-யின் திருவிளையாடல்கள் எல்லா துறைகளிலும் நடந்துள்ளன : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ADMK DMK Ma. Subramanian Edappadi K. Palaniswami
By Irumporai Jan 02, 2023 08:23 AM GMT
Report

கடந்த அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் எடப்பாடி பழனிசாமியின் திருவிளையாடல்கள் நடந்துள்ளன என்று செவிலியர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் தெரிவித்தார்.

செவிலியர்கள் பணி

அதாவது அமைச்சர் கூறுகையில், மற்ற தலைவர்கள் மனிதாபிமான அடிப்படையில் 2,300 செவிலியர்களின் பணி சம்மந்தமான விஷயம் என்பதால் அவர்கள் கருத்து சொல்வதில் தவறு இல்லை.

முழு பூசணிக்காய்

ஆனால், இந்த தவறுகளுக்கு முழு காரணமானவரே முழு பூசிணிக்காவை சோற்றில் மறைத்துவிட்டேன்என்பார்கள் போல, தெரிந்து தெரியாமலோ அப்போது செய்த தவறுக்கு பரிகாரம் தேடிக்கொள்ளப்பட வேண்டியவரே அறிக்கை கொடுப்பது என்பது அதிசயமான ஒன்றாக உள்ளது என இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.