தடையை மீறி போராட்டம் - எடப்பாடி பழனிசாமி கைது
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது . ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி
இதை எடுத்து தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுமா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வமும் உள்ளனர் .
இந்த நிலையில், திடீரென்று அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதை அடுத்து தனது ஆதரவாளர் ஆர்.பி. உதயகுமாரை, எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
வெளிநடப்பு செய்த எடப்பாடி அணி
எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆ.ர்பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை விடுத்து சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதமும் வழங்கியிருந்தார். இந்த கடிதங்கள் அனுப்பி வெகு நாட்களாகியும் இதுவரைக்கும் ஆர். பி. உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று சட்டமன்ற பேரவையில் இது குறித்து அமளியில் ஈடுபட்டு அதிமுகவினர் வெளி நடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பேரவையில் அங்கீகரிக்காததை கண்டித்து இன்று அதிமுக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த போராட்டத்திற்கு அனுமதி கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்தனர்.
ஆனால் காவல்துறை இந்த மனுவை பரிசீலனை செய்து உண்ணாவித போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் அறிவித்திருந்தார்.
எடப்பாடி கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ,மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், அதிமுக வழக்கறிஞர் பாபு முருகன் ஆகியோர் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
அந்த மனுவை பரிசீலித்து அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதால் தடையை மீறி எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்,இந்த நிலையில் சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கைது
கலைய மறுத்த ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யும்போது போலீசாருக்கு தள்ளுமுள்ளு
கைது செய்யப்பட்ட அனைவரையும் பேருந்தில் ஏற்றி வருகின்றனர் காவல்துறையினர்.