உதயநிதி எனக்கு 1.10 கோடி தரவேண்டும்...திடீரென வழக்கு தொடுத்த இபிஎஸ்...!!
சனாதனம் குறித்து விளக்கமளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை விமர்சித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்
உதயநிதி அறிக்கை
கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சனாதனம் பேச்சு குறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது என்று குறிப்பிட்டு, ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்திருந்தார்.
எடப்பாடி மனுத்தாக்கல்
உதயநிதி ஸ்டாலினின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தன்னை பற்றி அவதூறாக பேசி உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தன்னை குறித்து கருத்துக்களை தெரிவித்த உதயநிதி தனக்கு 1.10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.