முன்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கல்

passed away lata mangeshkar legendary singer express condolence eps tweet
By Swetha Subash Feb 07, 2022 05:02 AM GMT
Report

இந்திய திரையுலகின் முன்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 92 வயதான  பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர்,

சுமார் 20 நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக மும்பை ப்ரீச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரின் உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

இந்நிலையில், பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சிவாஜி பார்க்கில் கொண்டு வரப்பட்ட லதா மங்கேஷ்கர் உடலுக்கு அமைச்சர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்தனர்.

இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில், "இந்தியாவின் இசைக்குயில், பல கோடி மக்களை தன் காந்த குரலால் கவர்ந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது,

அவரின் ஆன்மா இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்,அவர் உடலால் மறைந்தாலும் தனது பாடல்களால் பூமி உள்ளளவும் வாழ்வார்" என பதிவிட்டுள்ளார்.