சசிகலா காலில் விழுந்தது ஏன்? உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் கொடுத்த இபிஎஸ்

Udhayanidhi Stalin V. K. Sasikala Edappadi K. Palaniswami
By Karthikraja Apr 09, 2026 02:55 PM GMT
Report

சசிகலா காலில் விழுந்தது ஏன் என உதயநிதி ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

2026 தமிழ்நாடுசட்டமன்ற தேர்தலுக்க்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் கால்களில் விழுந்த புகைப்படத்தை காட்டி, இது போன்ற அனுபவம் எனக்கு இல்லை. அவருக்கும் காலுக்கும் அவ்வளவு பொருத்தம்.

சசிகலா காலில் விழுந்தது ஏன்? உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் கொடுத்த இபிஎஸ் | Eps Explains Why Fell On Sasikala Feet

முதலில் ஜெயலலிதா அம்மாவின் காலில் விழுந்தார். அவர் இறந்த பிறகு சசிகலா அம்மாவின் காலில் விழுந்தார்" என கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, "இரவு 2 மணிக்கு உதயநிதி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை ரீபோஸ்ட் செய்கிறார். யார் காலைத் தேடி அவர் அவ்வாறு செய்கிறார் என்று எங்களுக்கு கேட்கத் தெரியாதா?

ஏற்கெனவே இப்படிப் போய்த்தான் பால்டாயில் குடித்தீர்கள். பால்டாயில் குடித்ததெல்லாம் பன்ச் டயலாக் பேசுது. அப்போதே மேல் லோகத்துக்குப் போயிருக்க வேண்டும். இங்கே இருந்துகொண்டு உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறது’’ என பேசினார்.

இந்நிலையில் இன்று சென்னை ராயபுரத்தில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தது குறித்து விளக்கமளித்துள்ளார்.

சசிகலா காலில் விழுந்தது ஏன்?

இது குறித்து பேசிய அவர், "எப்போது பார்த்தாலும் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தார் என பேசுகிறார். இப்போது அதுவா முக்கியம்? நாட்டில் உங்களுக்கு எதற்கு முதல் மந்திரி கொடுத்தார்கள். நீங்கள் என்ன செஞ்சீங்க என சொல்லுங்க. 

சசிகலா காலில் விழுந்தது ஏன்? உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் கொடுத்த இபிஎஸ் | Eps Explains Why Fell On Sasikala Feet

பதவி கிடைத்தது, பொறுப்பு கிடைத்தது, ஆசிர்வாதம் வாங்கினேன். இதுல என்னங்க தப்பு? ஆசீர்வாதம் வாங்குவது நம்ம பண்பு தானே? அந்த பண்புள்ள குடுமப்த்தில் பிறந்தால் இதெல்லாம் தெரியும்.

எதுவுமே தெரியாத ஒருவரிடம் பேசி என்ன பிரயோஜனம்? அதிமுக ஆட்சியில் இது இது தவறு என சொல்லு. பதில் சொல்ல தயார். சொல்ல முடியாது, இருந்தால் தானே சொல்லுவாங்க.

பொற்கால ஆட்சி என மக்கள் பாராட்டு பெற்ற அரசு அதிமுக அரசு. உங்கள் தாத்தா, உங்கள் அப்பா திமுக தலைவர் முதலமைச்சர், உங்களுக்கு நல்ல செல்வச்செழிப்பு இருக்கு.

நான் இப்படி தலைவரின் பேச்சே கீழே நின்று கேட்டு இங்கே வந்தவன் அந்த வலி எனக்கு தெரியும். உங்களுக்கு அது தெரியாது. செல்வச்செழிப்புல வாழ்ந்த திமிர்ல, ஆணவத்துல பேசிகிட்டு இருக்கீங்க. இந்த ஆணவம் இருக்க கூடாது தம்பி" என பேசியுள்ளார்.