அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் - தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
பொதுச்செயலாளர்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்தார்.
தேர்தல் ஆணையம்
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் காலையிலும், மாலையிலும் 2 கட்ட அமர்வுகளில் இது தொடர்பாக ஆலோசித்தனர். அதனையடுத்து தற்போது எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயாலாளராக நியமித்தது செல்லும் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
தற்போது எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.