அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது - எடப்பாடி பழனிசாமி!
அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட நிலையில் சசிகலா அதிமுகவினரிடையே தொலைபேசியில் உரையாடும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தநிலையில் அவருடன் தொலைபேசியில் பேசிய நபர்களை அதிமுக தலைமை கட்சியை விட்டு நீக்கி வருகிறது.
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனத் தெரிவித்தார்.
சசிகலா பத்து பேரிடம் பேசினாலும், பத்தாயிரம் பேரிடம் பேசினாலும் அதுபற்றி கவலை இல்லை என்றும் அதிமுக உறுதியாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.