மணிகண்டன் சாந்தினி மேட்டரில் எடப்பாடி பழனிசாமியை முதலில் விசாரிக்க வேண்டும் - புகழேந்தி!

EPS Manikandan Actor Shanthini
By Thahir Jun 22, 2021 11:33 AM GMT
Report

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கட்சியிலிருந்து ஏன் இன்னும் நீக்கவில்லை என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிகண்டன் சாந்தினி மேட்டரில் எடப்பாடி பழனிசாமியை முதலில் விசாரிக்க வேண்டும் - புகழேந்தி! | Eps Edapadi Palanisamy Manikandan Santhini 

பாமக இல்லையென்றால் அதிமுக 20 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறிய பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணியின் பேச்சுக்குக் கடந்த ஜூன் 13ஆம் தேதி புகழேந்தி பதிலடி கொடுத்தார். ஓ பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டதால் தான் அன்புமணி ராமதாஸ் எம்பி ஆனார் என்று குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ கூட்டத்தில் புகழேந்தியைக் கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் - ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, பாலியல் புகாரில் கைதான மணிகண்டனைக் கட்சியிலிருந்து தற்போது வரை நீக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முதலில் நடிகை சாந்தினியின் புகாருக்கு மறுப்பு தெரிவித்தார். பின்னர் சாந்தினி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர் என்றார். அதன் பிறகு 5 லட்சம் ரூபாய் சாந்தினிக்குப் பணம் கொடுத்ததாகச் சொன்னார். தொடர்ந்து அபார்ட்மென்ட்டில் ஐந்து வருடங்கள் அவருடன் வாழ்ந்ததாகக் கூறினார். எனவே இதனடிப்படையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றார்.

இப்படி தொடர் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை அதிமுக தலைமை ஏன் இன்னும் கட்சியிலிருந்து நீக்கவில்லை என கேள்வி எழுப்பினார். தற்போது ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால் ஒரே நொடியில் மணிகண்டனைத் தூக்கியிருப்பார். ஆனால் தற்போதைய அதிமுக தலைமை மணிகண்டனுக்கு ஏன் துணை போகிறது என்பது தெரியவில்லை என்றார்.

மணிகண்டன் சாந்தினி மேட்டரில் எடப்பாடி பழனிசாமியை முதலில் விசாரிக்க வேண்டும் - புகழேந்தி! | Eps Edapadi Palanisamy Manikandan Santhini

தொடர்ந்து பேசிய அவர், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியையும் அழைத்து விசாரிக்கத்தான் வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.