ஓபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுக்கும் இபிஎஸ் - பிரதமரை சந்திக்க டெல்லி பயணம்

Amit Shah AIADMK Narendra Modi Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Sep 19, 2022 01:18 PM GMT
Report

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இன்று இரவு டெல்லி செல்கிறார்.

டெல்லி செல்லும் இபிஎஸ் 

அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் டெல்லியில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுக்கும் இபிஎஸ் - பிரதமரை சந்திக்க டெல்லி பயணம் | Eps Delhi Visit To Meet Prime Minister

அவருடன் சில முன்னாள் அமைச்சர்களும் செல்ல உள்ளனர். டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை அவர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளார் என்றும் கூறப்படுகிறது.