இதுகுறித்து கருத்து கேட்பது இந்தியாவிலேயே ஸ்டாலின் மட்டும்தான்.. பொங்கிய ஈபிஎஸ்!

M K Stalin Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami
By Sumathi Aug 09, 2022 08:18 AM GMT
Report

 ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துபவர் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான் என ஈபிஎஸ் சாடியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தர்மபுரிக்கு சென்று அங்கே கட்சி அலுவலகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து கருத்து கேட்பது இந்தியாவிலேயே ஸ்டாலின் மட்டும்தான்.. பொங்கிய ஈபிஎஸ்! | Eps Criticizes Stalin Meeting Ban Online Gambling

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , "மக்களின் ஆசியோடு உயர்ந்த பதவியான இடைக்கால செயலாளர் என்ற பொறுப்பை ஏற்றுள்ளேன். ஒருபோதும் அதிமுக கழகத்தை அழிக்க முடியாது. இது வலிமையான இயக்கம்; வளமான இயக்கம்.

ஆன்லைன் சூதாட்டம்

ஸ்டாலின் அரசு அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடுகிற. து வழக்கின் மூலமாக கட்சியை கெடுக்க நினைத்தால் திமுக கட்சி இல்லாமல் போய்விடும் . அதிமுகவில் இருந்த சில துரோகிகள் திமுகவுடன் கைகோர்த்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து கேட்பது இந்தியாவிலேயே ஸ்டாலின் மட்டும்தான்.. பொங்கிய ஈபிஎஸ்! | Eps Criticizes Stalin Meeting Ban Online Gambling

தர்மபுரி மாவட்ட மக்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒகேனக்கல் நீர் ஏற்றும் திட்டத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை திமுக செயல் படுத்த முன்வரவில்லை.

ஸ்டாலின் மட்டும்தான்

மின்கட்டணத்தை திமுக அரசு உயர்த்தி உள்ளது. இதனால் மக்களையும், விவசாயிகளையும் இந்த விடியா திமுக அரசு வஞ்சித்து வருகிறது. தனக்கு வருமானம் , தன் குடும்பம் பிழைக்க வேண்டும் என்பதுதான் ஸ்டாலின் எண்ணம்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் எளிதில் இந்த ஆட்சியில் கிடைக்கிறது .ஆன்லைன் சூதாட்டத்தை கண்டிப்பாக தமிழகத்தில் ஒழிக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பதை விட்டுவிட்டு கருத்து கேட்கக் கூட்டம் நடத்துகிறார் முதலமைச்சர்.

ஆன்லைன் சூதாட்டம் நடத்துவது குறித்து கருத்து கேட்பது என்பது இந்தியாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான்" என்றார்.