எம்ஜிஆருக்கு சசிகலா அரசியல் ஆலோசனையா? - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜலகண்டாபுரத்தில் தூய்மை பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள் 100 பேருக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,நீட்தேர்வு ரத்து விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது போல் அல்லாமல் ஆரம்ப காலக்கட்டத்தில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வீணானதாகவும்,கொரோனா மூன்றாம் அலை பரவும் சூழலில் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து தமிழக அரசு பெற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எம்ஜிஆருக்கு அரசியல் ஆலோசனை வழங்கியதாக கூறிய சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை அழித்துவிட முடியாது. சசிகலா அதிமுகவிலிருந்த காலத்திலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.