மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடியை பழனிசாமியை தேர்வு செய்தனர்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
அடுத்த கட்ட நடவடிகைகள் பற்றி ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தலைமை கழகத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பு வருவதை பொறுத்து அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.