பட்ஜெட்டிலும் ஏமாற்றப்பட்ட திமுக வாக்குறுதி - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
tngovernment
edappadipalanisamy
cmmkstalin
tnbudget2022
By Petchi Avudaiappan
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இந்த ஆண்டும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கும் முன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார். ஆனால் அதனை சபாநாயகர் அப்பாவு நிராகரித்ததால் அ.தி.மு.க.எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , தமிழக பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தார்.