தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு - அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வென்று திமுக ஆட்சியைப் பிடித்தது. 65 இடங்களில் வென்று அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.
அதிமுக சார்பில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்பதை தேர்வு செய்ய கடந்த 7-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதில் முடிவு எட்டப்படவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவருக்கும் இடையே போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகின.

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தேர்வு.
— AIADMK (@AIADMKOfficial) May 10, 2021
இந்நிலையில் நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுத்தாக வேண்டிய நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது.
3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் இறுதியில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.