ஈபிஎஸ் தண்டனையில் இருந்து தப்ப முடியாது : டிடிவி தினகரன்

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Aug 24, 2022 11:02 AM GMT
Report

 முறைகேடு வழக்கிலிருந்து எடப்பாடி பழமிசாமி தப்ப முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தனிபட்ட விரோதம் இல்லை

தஞ்சையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமி மீது எந்த தனிபட்ட விரோதமும் இல்லை எனக் கூறினார். மேலும், அ.தி.மு.க.வில் சசிகலா, நான், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என்கிற ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் கருத்தை வரவேற்கிறேன்.

ஈபிஎஸ் தண்டனையில் இருந்து தப்ப முடியாது : டிடிவி தினகரன் | Eps Cant Escape Punishment

ஆனால் சில மேதாவிகள் துரோகத்தையே சுவாசமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் நல்ல விஷயத்திற்கு ஒத்துவர மாட்டார்கள். அந்த துரோகிகள் திருந்தினால் தான் மற்றவர்களின் எண்ணங்கள் நிறைவேறும் என்று தெரிவித்தார்.

 பழனிசாமி தப்ப முடியாது

மேலும் அனைவரும் ஒண்றினைத்து திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். மக்கள் நம்பிக்கை வைத்து திமுகவை ஆட்சியில் அமர வைத்தனர்.

ஆனால் அவர்கள் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றவில்லை என்று கூறிய டிடிவி தினகரன் , இலக்குகளோடு பயணிக்கும் இந்த உலகத்தில் பதவிகாக பயணிக்க நினைக்கும் ஒரே தலைவன் எடப்பாடிதான் என்று கூறினார்.

மேலும், நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் துரோகம் செய்தவர்களுக்கு இறைவனே நினைத்தாலும் பழனிசாமிக்கு தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.    

அப்போது அதிமுக ஒன்றிணைந்தால் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்று கேட்டால் என்னை பொறுத்தவரை அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அதன் பிறகு பார்ப்போம் எனக் கூறினார்.