அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி? - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடி முடிவு
ஒரு மாதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
அதிமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்து இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
அதிமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்து இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
பாஜக - அதிமுக கூட்டணி தொடர்கிறது
இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் பற்றி விவாதிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது தொடர்பாக தகவல் வெளியான நிலையில் அதற்கு ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய ஜெயக்குமார், ஓபிஎஸ் கட்சி நடத்தவில்லை, கடை நடத்துகிறார் என்றார்.
பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என தெரிவித்தார். உரிய நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.