என்ன மெச்சூரிட்டி உள்ளது அண்ணாமலைக்கு? கொந்தளித்த இபிஎஸ் !!
மழை வெள்ள பாதிப்பை குறித்து அண்ணாமலை விமர்சித்த நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை கருத்து
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அங்கங்கே மழை நீர் சாலையில் தேங்கி பெரும் இன்னலை மக்களுக்கு அளித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, ஆட்சிகள் மாறினாலும் காட்சி மாறவில்லை என விமர்சனம் செய்திருந்தார்.
எடப்பாடி விமர்சனம்
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, ஒருநாள் மழைக்கேசென்னை தத்தளிக்கும் சூழலை பார்த்தோம் என்றும் மழையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் என்று கூறி, முறையாக வடிகால் பணிகளை மேற்கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.
தொடர்ந்து அண்ணாமலை பற்றி பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன மெச்சூரிட்டி உள்ளது? என்று கேள்வி எழுப்பி, மழை பாதிப்புகளுக்கு இடையே சென்னையில் கார் பந்தயம் நடத்துவது ஏன்? என வினவியிருகின்றார்.