சசிகலாவின் வெளியான ஆடியோ குறித்து ஈ.பி.எஸ் சூசக பதில்!
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமையகத்தில் சென்னை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஆனால் இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் மத்திய அரசும் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இணையத்தின் வெளியான சசிகலாவின் ஆடியோ குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “சசிகலா அதிமுகவில் இல்லை. தேர்தலுக்கு முன்பே அவர் அறிக்கை மூலமாக தெளிவாக கூறிவிட்டார். அமமுகவைப் பற்றி தான் அவர் பேசியுள்ளார்” என்றார்.
ஓ.பி.எஸ் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பற்றி கேட்டதற்கு, “ஓ.பி.எஸ் அவர்களின் வீட்டில் இன்று கிரகப் பிரவேசம் நடைபெறுகிறது. அதனால் தான் அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை” என்றார்.