பாலியல் வன்கொடுமை வழக்கு.. காவல் ஆணையர் கூறுவது முரணாக உள்ளது? அமைச்சர் விளக்கம்!
உயர்கல்வித் துறை அமைச்சரும், காவல் ஆணையரும் கூறும் பதில் முரணாக உள்ளது என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் புகார் தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சரும், காவல் ஆணையரும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்திருப்பது
மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாறுபட்ட கருத்துகளை ஆணையரும்,
அமைச்சரும் கூறியிருப்பதாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், காவல்துறை அவசர உதவி எண்ணான 100-க்கு தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மாணவி நேரடியாக புகார் அளித்ததாகவும்,

செருப்பால அடிச்சிருக்கணும்..பெண்ணைப் பெற்ற தகப்பன் - அண்ணா பல்கலை விவகாரம் குறித்து பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு!
அமைச்சர் விளக்கம்!
அதன் அடிப்படையில் விசாரிக்கச் சென்றபோது, பல்கலைக்கழக உள் விசாரணைக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரின் உதவியுடன் காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் பல்கலைக்கழகத்துக்கு விசாரணைக்கு வந்தபோதுதான் பல்கலைக்கழக உள் விசாரணைக்குழுவில் இருந்த பிறருக்கு இந்த விவகாரம் தெரியவந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதை வைத்துதான் பல்கலைக்கழக உள் விசாரணைக்குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை என்று தாம் தெரிவித்ததாகவும், ஆனால் அது தவறாகப் பொருள்படும்படி அமைந்துவிட்டதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இந்தியா கைகளில் எடுத்துள்ள முக்கிய ஆயுதம்? கொம்பேறிமூக்கனாக மாற இருக்கும் இந்திய உளவுப் படை!! IBC Tamil
