ஆட்சி மாறும்...காட்சி மாறும் - அரசு அதிகாரிகளை எச்சரித்த இபிஎஸ்
தமிழ்நாட்டில் ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி நடுநிலை தவறும் அரசு அதிகாரிகள் எதிர்வினையை சந்திப்பார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு அதிகாரிகளை எச்சரித்த இபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சாரத்தின் போது பேசிய அவர்,
ஆட்சிகள் மாறினார் காட்சிகள் மாறும் என்று இரண்டு முறை மீண்டும் மீண்டும் கூறிய அவர், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும் எனக் கூறினார்.
நடுநிலை தவறும் அதிகாரிகள் அதற்குரிய எதிர்வினையை சந்திப்பீர்கள் என பகிரங்கமாக எச்சரித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவினருக்கு அரசு அதிகாரிகளும், அரசு அலுவலர்களும் பல்வேறு நெருக்கடிகளை கொடுப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் புகார் கூறிய நிலையில், அவர் இப்படி கொந்தளித்தாக கூறப்படுகிறது.