72 நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் ஈபிஎஸ்
பொதுக்குழு தீர்ப்புக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாளை செல்கிறார் எடப்பாடிபழனிச்சாமி.
அதிமுக பொதுக்குழு விவகாரம்
கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அதிமுக உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நீதிமன்றம்.

அதிமுக பொதுக் குழுவை அக்கட்சியின் சட்டவிதிகளின் படி நடத்திக் கொள்ள தடை ஏதும் இல்லை என தீர்ப்பளித்தது. இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில் நாளை ஈபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்கின்றார்.
தலைமை அலுவலகம் செல்லும் ஈபிஎஸ்
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 8.9.2022 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில், தலைமைக் கழகம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வருகை தந்து.

தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.; இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/L1g0xp4L6y
— AIADMK (@AIADMKOfficial) September 7, 2022
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.