கூட்டணி பற்றி பேசவே கூடாது; இபிஎஸ் திடீர் அறிவிப்பு - என்ன நடந்தது?
கூட்டணி பற்றி எங்கும் பேச வேண்டாம் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டணி
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கூட்டணி தொடர்பான பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். அதனைப்பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. அது தானாகவே நடக்கும்.
இபிஎஸ் அறிவுரை
அதேபோல் கூட்டணி பற்றி எந்தவொரு கருத்தையும் யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம். பூத் கமிட்டி பணிகளை சரியாகப் பார்த்தலே போதுமானது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கவனமுடன் கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிகம் எதிர்பார்த்த தவெக கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.