இனி PF-ல் 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம் - எப்படி தெரியுமா?
வருங்கால வைப்புநிதியில் 100 சதவீதம் வரை பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்புநிதி
பி.எஃப் கணக்கில் தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையும், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மூலம் குறிப்பிட்ட தொகையும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வருங்கால வைப்பு நிதி திட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டது.
அரசு அனுமதி
அதன்படி, பி.எஃப். பயனாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை நூறு சதவீதம் திரும்ப பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்திய தொகையை பயனாளர்கள் முழுவதுமாக திரும்ப பெற முடியும்.
கல்வி தேவைக்காக மூன்று முறைக்கு பதிலாக 10 முறையும், திருமண தேவைக்காக மூன்று முறைக்கு பதிலாக ஐந்து முறையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. தேவைக்கான காரணங்கள் 13இல் இருந்து அத்தியாவசியம், வீட்டுத் தேவை மற்றும் சிறப்பு சூழ்நிலை என்று 3 வகைகளாக குறைக்கப்பட்டுள்ளன.
பேரிடர், வேலையின்மை போன்ற சிறப்பு சூழ்நிலை பிரிவில் தேவைக்கான காரணத்தை குறிப்பிடத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.