PF வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் நியூஸ் - வங்கிக் கணக்கில் வரும் ரூ.15 ஆயிரம்
PF வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
வருங்கால வைப்பு நிதி
மத்திய அரசின் திட்டமான "வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை" காலக்கெடுவை ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் மீண்டும் ஒருமுறை நீட்டித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், தகுதிவாய்ந்த நபர்கள், அனைத்து ஊழியர்களின் வங்கிக் கணக்கிலும் யூஏஎன் செயல்படுத்துதல் மற்றும் ஆதார் பதிவு செய்வதற்கான காலக்கெடு 15.12.2024 இருந்து 15.01.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் (திட்டம்-ஏ, திட்டம்-பி, திட்டம்-சி) என மூன்று முக்கிய திட்டங்கள் உள்ளது. இந்த ஒவ்வொரு திட்டத்தின் கீழும் ஊழியர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.
திட்டம் - ஏ: இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், முதல் முறையாக வேலை தேடுபவர்களை அங்கீகரித்து ஒரு மாத சம்பளத்தை ஊக்கத்தொகையாக வழங்குவதாகும். அதிகபட்சமாக ரூ.15,000 வரை மூன்று தவணைகளாக ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
திட்டம் - பி: இந்தத் திட்டம் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறுவன உரிமையாளர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாக்களை நான்கு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாகப் பெறலாம்.
திட்டம் - சி: இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு ஒவ்வொரு ஊழியருக்கும் மாதம் ரூ. 3,000 என இரண்டு ஆண்டுகளுக்கு சந்தா செலுத்த வேண்டும். இந்த திட்டம் ஜனவரி 2025 முதல் செயல்படுத்தப்படும்.