சென்னை கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு தடை - அதிரடி அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்திலும் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி வரை தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை கடற்கரையில் நாளை முதல் (ஜனவரி 2) மக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒமைக்ரான் கொரோனா பரவல் காரணமாக மறுஉத்தரவு வரும் வரை கடற்கரையின் மணற்பரப்பில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட உள்ளதாகவும், பிரத்யேக நடைபாதையில் மட்டும் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.